கபீஷ் படக்கதை- குழந்தைகள் தின ஸ்பெஷல்.
989- 90 களில் எனது பொழுது போக்கு கிரிக்கெட் விளையாடுவது. அதை விட்டால் புத்தகம் படிப்பது, கோகுலம், ராணிகாமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, என ஏகப்பட்ட சிறுவர் இதழ்கள் அப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது. வாண்டுமாமா ஆசிரியராக இருந்து வழி நடத்திய பூந்தளிர் சிறுவர் இதழ்தான். இதில்தான் படக்கதைகள் அதிகம் வரும். சிறுவர்களை ஈர்க்கும். இந்த உத்தியை அறிந்து நிறைய படக்கதைகள், அறிவுப்பூர்வமான தகவல்கள் என பூந்தளிர் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் கபீஷ் படக்கதை என்னை மிகவும் கவர்ந்திழுத்து வாசிக்க வைத்த ஒன்று.
பூந்தளிர் வீட்டுக்கு வந்தவுடனே யார் முதலில் படிப்பது என்று எனக்கும் என் தங்கைகளுக்கும் போட்டியே நடக்கும். கடைசியில் நானே வென்று ஒரு அரை மணி நேரத்தில் வாசித்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். ஆனால் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருப்பேன் அடுத்த இதழ் வரும் வரை.
பூந்தளிர் இதழ் 90 களில் இருந்து வாங்கினாலும் பல இதழ்கள் சேமிக்கவில்லை. மீதமிருந்த இதழ்களில் கபீஷ் படக்கதைகளை தொகுத்து சேமித்து வைத்திருந்தேன். அந்த புத்தகம் இன்று என் கைகளில் கிடைத்தது. அதிலிருந்து சில பக்கங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன். இன்றைய குழந்தைகள் தினத்தில் நம்மை குழந்தைகளாக்கிய கபிஷுக்கு நன்றி சொல்வோம்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பகிர்ந்து செல்லலாமே! நன்றி!
Comments
Post a Comment